School Reopens On --> 05.06.2023
Vision
Mission
- To mould every child into a good student and a valuable citizen.
- Imparting sound academics.
- Exposing them to necessary skills and talents.
- Inculcating desirable values.
Values
- Faith in God
- Punctuality
- Sharing
- Respecting Elders
Welcome to TVS Primary School
Headmistress Desk

விருது யாருக்கு?
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. - என்கிறது வள்ளுவம்.
ஆம். TVS நிர்வாகம் என்ற நிலத்தில் வந்து சேரும் நீர்த்துளிகள் ஆகிய அத்தனை பணியாளர்களும் நிர்வாகத்தின் குறி இலக்குகளையும், நோக்கங்களையும், அதன் வழி முறைகளையும் உள்வாங்கி, தன் மயம் ஆக்கிக்கொண்டு தம் பணிகளைச் செவ்வனே செய்வர் என்பது மரபு.
ஆம் அத்தகைய மரபினை பின்பற்றும் பணியாளர்களை நிர்வாகம் மட்டுமன்றி அரசாங்கமும் அங்கீகரிக்கும் என்பது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் T.V.S. ஆரம்பப் பள்ளியின் சீரிய பணிகளையும் சேவைகளையும் பாராட்டும் முகத்தான், இவ்வாண்டு தமிழக அரசு மாநில நல்லாசிரியர் விருதினை வழங்கியுள்ளது. இது உண்மையில் எனக்கு கிடைத்த விருது அன்று. எனது ஆசிரியப் பெருமக்களின் மனப்பூர்வமான சேவைக்கும் நிர்வாகத்தின் செம்மையான வழிகாட்டுதலுக்கும் கிடைத்த ஓர் அங்கீகாரம் என்று நான் உறுதியாகக் கூறுவேன். இந்த பெருமைக்குரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது எங்களது கடமைகளை மேலும் தரம் உடையதாக ஆற்றுவதற்கு ஒரு கூடுதல் பொறுப்பினை நாங்கள் பெற்றுள்ளதாகவே உணர்கின்றேன். இந்த சீரிய விருதினை, நம்மையெல்லாம் தோன்றாத் துணையாக இருந்து வழிநடத்திச் சென்று கொண்டு இருக்கும் TVS ஸ்தாபகர் ஐயா அவர்களின் பொன்னார் திருவடிகளில் சமர்ப்பித்து மகிழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
நன்றி வணக்கம்.
P. ஜெயந்தி,
தலைமை ஆசிரியை,
டி.வி.எஸ் ஆரம்பப் பள்ளி .